விளையாட்டுத் துறையில் குழந்தைகளின் பங்களிப்பை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்- கோவையில் இறகு பந்து வீராங்கனை பி.வி.சிந்து பேட்டி



கோவையில் தனியார் விளையாட்டு மையமான விஷன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி-யின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"எந்த விளையாட்டாக இருந்தாலும் அடிப்படையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். அப்போதுதான் திறமையை வெளிப்படுத்த முடியும். தொடர்ந்து பயிற்சி பெறுவதன் மூலமே வெற்றியை அடைய முடியும். 

நான் தொடர்ந்து பயிற்சி எடுத்ததன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது. பல்வேறு நாட்டு வீரர்களுடன் விளையாடும் போது அவர்களின் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் புதிய அனுபவங்களும் ஏற்படுகிறது. 

விளையாட்டுத் துறையில் குழந்தைகளின் பங்களிப்பை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவிற்காக விளையாடும் போது நான் வெற்றி பெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலை மாறி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இறகு பந்து போட்டியிலும் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்துகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று.

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வெளிக்கொணர்ந்து சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும். கோவை போன்ற பகுதிகளில் இதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது" என்றார்.

தொடர்ந்து, இந்தியா போன்ற பெரிய நாட்டில் குறிப்பிட்ட சில வீர்ரகள் மட்டுமே சாதிக்க முடிகின்றது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தற்போதைய நிலையில் புதிய இளம் வீரர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றனர்" என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...