சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார்.

அவரது கணவர் நடராஜன் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. அவரது சிறுநீரகமும், கல்லீரலும் செயல் இழந்து விட்டதால், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நடராஜன் காத்திருக்கிறார். உறவினர் ஒருவரின் கல்லீரல் நடராஜனுக்கு பொருத்தப்பட உள்ளது. நடராஜனுக்கு ஆப்ரே‌ஷன் நடக்கும்போது அவரை அருகில் இருந்து சசிகலா கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று உறவினர்கள் வலியுறுத்தினார்கள்.

இதை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார். 15 நாட்கள் பரோலில் செல்ல சசிகலா சார்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தனர். 

சசிகலா பரோல் மனுவுடன் அவரது கணவர் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக சென்னை குளோபல் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து மருத்துவ அறிக்கையும் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. எப்படியும் அவர் பரோலில் வெளியே வருவார் என தினகரன் ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

சசிகலாவின் பரோல் மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருவதாக இன்று பிற்பகல் கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக இன்றிரவு தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, நடராஜனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக புதிய மருத்துவ அறிக்கையுடன் சசிகலா தரப்பில் புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.

சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக வெளியாகிவரும் தகவல்களை கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் (தினகரன் அணி) புகழேந்தி மறுத்துள்ளார். மனு பரிசீலனையில் உள்ளதாகவும், நிரகரிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...