குப்பைகளால் நிறையும் மகாத்மா காந்தி சாலை- நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி


ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரிக்கு எதிரே அமைந்திருக்கிறது சரோஜினி சாலை. இந்த சாலை சங்கனூர் ஓடையை கடந்து மகாத்மா காந்தி சாலையோடு இணைகிறது. இவ்வழியாக ஆவாரம்பாளையம், தண்ணீர் பந்தல் மற்றும் நவ இந்தியா போன்ற முக்கிய சந்திப்புகளை விரைவாக சென்றடைய முடியும். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளோடு ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.



கடந்த வாரம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளுக்காக இந்த தொழிற்சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு, இயந்திர கழிவுகள், பயன்படாத உபகரணங்கள், பழைய பொருட்கள் என அனைத்தையும் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைத்தொட்டியில் கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் குப்பைத் தொட்டி சில நாட்களில் நிரம்பி வழிய தொடங்கியது. தொடர்ந்து அந்த இடத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் சாலையின் இரு ஓரங்களும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- இந்த சந்திப்பில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை, இது குறித்து பல முறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் குப்பை எடுக்கும் வாகனம் வந்து பல நாட்கள் கடந்துவிட்டது" என்றனர்.



மேலும், இப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் சமூக விரோதிகள் தொடர்ந்து தீ வைப்பதால் மாநகராட்சி நிர்வாகம் குப்பைத்தொட்டிகளை அகற்றிவிட்டதாகவும், இதனால் வேறுவழியின்றி சாலைகளில் குப்பைகளை கொட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைப்பதோடு, மழை நாட்களில் இந்த குப்பைகள் அருகில் உள்ள சங்கனூர் ஓடையில் கலந்து பெரும் அடைப்பை ஏற்படுத்துவதாகவும், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற சூழலை உருவாக்குவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வளர் ஒருவர் கூறினார்.



மகாத்மா காந்தியின் வழியில் சுத்தமான தேசத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பெரும் பொருட் செலவுகளில் பல நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், அவை இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதையே இந்த குப்பை மேடுகள் உணர்த்துகிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...