கோவை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை வழங்கப்படவில்லை- விவசாயி வேதனை

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடந்த சில நாட்களாக குடல் இறக்கம் நோயால் அவதியுற்று வருகிறார். 

இதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த கோவிந்தராஜ், தனக்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளகளிடம் அவர் கூறியதாவது:- 

எனது சொந்த ஊர் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமம். அங்கு இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர சுமார் 8 மணி நேரம் ஆகிறது. 

குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஆய்வகத்திற்கு சென்றேன். கடந்த இரு தினங்களாக தினமும் ஆய்வகத்திற்கு செல்கிறேன். நான் செல்லும் நேரத்தில் ஆய்வகத்தில் ஆட்கள் இல்லை எனவும், நாளை வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.



விவசாய கூலியான என்னை தினமும் அலைக்கழிப்பதால் அன்றாட வாழ்வாதாரத்தை பறிகொடுப்பதோடு, உடல் நிலையும் மிகவும் மோசமாகி வருகிறது.

மருத்துவ அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...