தூய்மைப் பணிகளுடன் காந்தி ஜெயந்தியை கொண்டாடிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்களது சிறந்த சேவையினை வழங்கி வருகின்றனர்.

அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.



கோவை மாநகராட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், பாரத ஸ்டேட் வங்கி, இஎப்ஐ கோயம்புத்தூர் அமைப்பினர் உள்ளிட்டு ரோட்டரி சங்கத்தினர் மற்றும் மாவட்ட சட்ட உரிமை கழகத்தினரும் கலந்துகொண்டனர்.



தொடர்ந்து, இந்த களப்பணியில் இரண்டு டிராக்டர் அளவுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குளத்தை சுத்தம் செய்ய 8 வாரங்களுக்கு தேவையான உபகரணங்களை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர் வழங்க உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...