கோவை மத்திய சிறைச்சாலையில் மரம் நடும் விழா - ஈஷா பசுமை கரங்களுடன் இணைந்து 3650 மரக்கன்றுகள் நடவு

ஈஷா பசுமை கரங்களோடு இணைந்து, கோவை மத்திய சிறைச்சாலைக்குள் 3650 மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி சைலேந்தர் பாபு தலைமை தாங்கினார். ஆய்வாலர் ஜெனரல் ஆர்.அறிவுடைநம்பி, சிறைச்சாலை கண்காணிப்பாளர்  எம்.செந்தில் குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் 3000  டிம்பர்  மரங்களும் 650 பழ  மரங்களும் நடவு செய்யப்பட்டன. மரங்கன்றுகள் அனைத்தும்  ஈஷா  பசுமை கரங்களினால் வழங்கப்படும் இலவச மரக்கன்றுகளாகும். இவை அனைத்தும் 100 நதவிகிதம் இயற்கை முறைப்படி ஈஷா  நர்சரியில் உருவாக்கப்பட்டவை  என்பது  குறிப்பிடத்தக்கது. தேக்கு, மஹாகனி, ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேங்கை, மஞ்சள் கடம்பு உள்ளிட்ட மரங்களும் நெல்லி, எலுமிச்சை,கொய்யா,  மாதுளை, விளாம்பழம் போன்ற பழ மரங்களும் இதில் நடவு செய்யப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு, சிறைச்சாலையின் நுழைவாயில் அருகே முதல் மரக்கன்றை நட்டு வைத்தார். அவர் இந்த மரம் நடுதல் நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றையும் இன்று  திறந்து வைத்தார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...