News
சூலூர் அருகே சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்: 18 வயது நபர் கைது
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமத்தில் 4 வயது மற்றும் 5 வயது பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த பன்றி இறைச்சி கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூலூர் அருகே உள்ள கிராமத்தில் எல்கேஜி படித்து வரும் 4 வயது சிறுமி மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 5 வயது சிறுமி ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது வீட்டின் அருகே உள்ள பன்றி இறைச்சி கடையில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இரண்டு சிறுமிகளையும் பன்றி இறைச்சி கடையில் உள்ள பன்றி வெட்டும் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதனால் பயந்து போன சிறுமிகள் இருவரும் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்று தங்களது தாயாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரமா தேவி வழக்கு பதிவு செய்து, அதே ஊரில் பன்றி இறைச்சி கடையில் வேலை செய்து வரும் மகேந்திரனின் மகன் தவசி (வயது 18) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தவசி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தவசியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.