News
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வர் ஜோசப் விஜய் பதவி விலக வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி விலக வேண்டும் என வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஆண்டு திமுக அரசு அடக்குமுறைகளை ஏவி, தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் தடுத்ததாகவும், இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை பொருட்டாகவே மதிக்காமல் ஜோசப் விஜய் அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். திமுக அரசு பின்பற்றிய அதே இந்து விரோதப் போக்கையே ஜோசப் விஜய் அரசும் பின்பற்றியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டது எல்லாம், இந்துக்களை ஏமாற்ற நடத்தப்பட்ட நாடகம் என்பது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபத் தூணில் தீபம் ஏற்றாததன் மூலம் உறுதியாகியுள்ளதாக வானதி சீனிவாசன் கூறினார். மாற்று மதத்தை சேர்ந்தவரான ஜோசப் விஜய், பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை, இந்து கடவுள்களை, இந்து சம்பிரதாயங்களை மட்டும் எதிர்க்கும் கட்சிகளின் வரிசையில் தவெகவும் சேர்ந்திருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். இந்துக்களுக்கு ஆதரவானது என்றால், உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கேட்க மாட்டோம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் செயலில் காட்டியிருப்பதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுத்தாதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல், இந்துக்களை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தையும் அவமானப்படுத்திய முதல்வர் ஜோசப் விஜய் பதவி விலக வேண்டும் என வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் என்றும், அதற்கான காலம் விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.