News
கோவை மாநகராட்சியில் ரூ.18.21 கோடியில் 117 உட்கட்டமைப்பு பணிகளுக்கு அனுமதி–விரைவில் பணிகள் தொடக்கம்
SimpliCity News Team · 22 hours ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, மொத்தம் ரூ.18.21 கோடி மதிப்பீட்டிலான 117 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பாகவும் சீராகவும் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில், சாலைகளின் தரத்தை மேம்படுத்த, சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் மற்றும் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (2026-27) ரூ.9.73 கோடி மதிப்பீட்டில் 17.31 கி.மீட்டர் நீளத்திற்கு 96 தார் சாலை புதுப்பிக்கும் பணிகளும், மாநில நிதிக்குழு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (2026-27) ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் 3.19 கி.மீட்டர் நீளத்திற்கு 9 எண்ணிக்கையிலான சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் பள்ளிகளில் LDIT 6000 61 மாணவியருக்குத் தேவையான கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 65 மாநில நிதிக்குழுவின் பள்ளிமேம்பாட்டு மானியங்கள் நிதியின்கீழ் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கும், ஏற்கெனவே உள்ள பள்ளி வகுப்பறைகளின் தரம் மற்றும் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் 5 எண்ணிக்கையிலான பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் முன்பருவக் கல்விக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 65 மாநில நிதிக்குழுவின் பள்ளிமேம்பாட்டு மானியங்கள் நிதியின்கீழ் ரூ.64.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மேம்படுத்துவதுடன் பொதுமக்களுக்குத் தரமான பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.108 கோடி மதிப்பீட்டில் 4 எண்ணிக்கையிலான பூங்காக்கள் அமைக்கும் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, மொத்தம் ரூ.18.21 கோடி மதிப்பீட்டிலான 117 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், சாலைப் பணிகள், பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டவுடன் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.