News
கோவை சின்னதடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (24.11.2026) மின்தடை
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மாவட்டம், சின்னதடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (24.11.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், சின்னதடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.