News
திமுக ரூ.40 கோடி பேரம் பேசியது; மறைமுகக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன – கோவையில் துரை வைகோ
SimpliCity News Team · 5 days ago

கோவை: நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், அரசு விசாரணை மேற்கொண்டு வரும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். புத்தகக் கொள்முதல் முறைகேடு இந்தியாவிலேயே மிகப்பெரிய முறைகேடுகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாகப் புகார் அளித்ததாகத் தெரியவில்லை என்று தெரிவித்த துரை வைகோ, இருப்பினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என்று விமர்சித்தார்.
ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக துரை வைகோ கருத்துத் தெரிவித்து வந்தபோது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
