News
கோவை காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2026) மின்தடை
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை மாவட்டம், காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர் மற்றும் மகேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.