News
கோவை கீரணத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2026) மின்தடை
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை மாவட்டம், கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (18.11.2026) மேற்கொள்ளப்பட உள்ளதால், பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக, குறிப்பிட்ட நேரத்தில் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படாது.
மின் விநியோகம் இல்லாத பகுதிகள் பின்வருமாறு:
- கீரணத்தம்
- வரதய்யங்கார்பாளையம்
- இடிகரை
- அத்திப்பாளையம்
- சரவணம்பட்டி சில பகுதிகள்
- விஸ்வாசபுரம்
- ரெவின்யூ நகர்
- கரட்டுமேடு
- விளாங்குறிச்சி சில பகுதிகள்
- சிவானந்தபுரம்
- சத்தி சாலை
- சங்கர வீதி
- ரவி தியேட்டர்
மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது அன்றாட பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.