News
கோவை தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2026) மின்தடை
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை மாவட்டம் தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் நவம்பர் 18, 2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த மின்தடை ஏற்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக வகுத்தம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிபுதூர் ஒரு பகுதி, கபலன்கரை ஒரு பகுதி, சேரிபாளையம் மற்றும் ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மின் தடை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.