News
கோவை கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2026) மின்தடை
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2026) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.
இப்பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இதற்காக மேற்படி நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர் மற்றும் காளியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்கள் நாளைய வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.