News
கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (17.11.2026) மின்தடை
SimpliCity News Team · 6 days ago

Coimbatore: கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (17.11.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக, பூராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, அலமு நகர் மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் என்பதால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.