News
கோவை சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.11.2026) மின்தடை
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மாவட்டம் சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.11.2026) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.