News
கோவை இருகூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.11.2026) மின்தடை
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாவட்டம் இருகூர் துணை மின் நிலையத்தில் நாளை (13.11.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இடைநிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளன. இந்த நேரத்தில், இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளப்பாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்டுவின்ஸ் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் மின்தடை காலத்திற்கு ஏற்ப தங்கள் அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.