News
கோவை: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று அணைகளின் நவம்பர் 5ஆம் தேதி நிலவரப்படியான நீர்மட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணை 120 அடி முழுக் கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 134 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது, மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி முழுக் கொள்ளளவு கொண்டது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 124 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது, அணையிலிருந்து வினாடிக்கு 926 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி முழுக் கொள்ளளவு கொண்டது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.47 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 353 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது, அணையிலிருந்து வினாடிக்கு 85 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.