News
தித்திப்பான தீபாவளி: கோவை அன்னபூர்ணாவின் தீபாவளி ஸ்வீட் மேளா தொடங்கியது
SimpliCity News Team · 3 days ago

கோவை :கோவையில் பிரபலமான அன்னபூர்ணா உணவகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி இனிப்புத் திருவிழாவான 'தீபாவளி ஸ்வீட் மேளா' நவம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மேளா, அன்னபூர்ணாவின் கணபதி, அவிநாசி தேசிய நெடுஞ்சாலை, அவிநாசி சாலை, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், துடியலூர் மற்றும் பீப்பிள்ஸ் பார்க் ஆகிய கிளைகளில் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் சாலை கிளையில் நடைபெற்ற தொடக்க விழாவில், அன்னபூர்ணாவின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ். தாமோதரசாமி ஆகியோர் மேளாவைத் தொடங்கி வைத்தனர்.
சொடல் டெக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் கே.எஸ். சுப்ரமணியம், முதன்மைப் பொது மேலாளர் ஜி.டி. மூர்த்தி, இயக்குநர்கள் ஹேமமாலினி, பி. ஸ்ரீனிவாசன், பத்மாவதி லக்ஷ்மணன் மற்றும் அஸ்வத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த மேளாவில் பர்பி சாக்லேட், பர்பி கேசர், மலாய் பர்பி, மில்க் கோவா பர்பி, அத்திப்பழ மில்க் கேக், கீர் கதம் ஸ்பெஷல், கிவி பாதாம் காஜு டிலைட், சாண்ட்விச் மில்க், ஸ்பெஷல் மில்க் கேக், திரிவேணி சக்ரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நெய் இனிப்பு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான கார வகைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
பண்டிகையின் மகிழ்ச்சியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், ரூ.150 முதல் ரூ.1,000 வரையிலான சிறப்பு வவுச்சர்களும் அன்னபூர்ணாவின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கின்றன.
நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமையுடன் இந்த ஐந்து நாள் ஸ்வீட் மேளா நிறைவடைகிறது. தொடக்க விழாவில் அன்னபூர்ணா ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

