News
கோவை காரமடை அருகே குட்டையில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
SimpliCity News Team · 16 hours ago

Coimbatore: கோவை காரமடையைச் சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி மாணவர் பரத், பெட்டதாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயன் குட்டையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரமடையைச் சேர்ந்தவரான பரத், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி இ மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் பரத் தனது நண்பர்களான விஷ்ணு, ராகுல், நிதின், கிருஷ்ணா ஆகியோருடன் பெட்டதாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயன் குட்டையில் குளிக்க வந்தனர். நீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்ற பரத் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பரத்தின் உடலை தேடி வருகின்றனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
