News
கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் பல்விளையாட்டுகளுக்கான நவீன செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட பல்விளையாட்டு செயற்கை புல்வெளி மைதானம் (Turf Multi Sports Complex) திறப்பு விழா நடைபெற்றது.
அக். 28-ம் தேதி காலை 11 மணிக்கு கற்பகம் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் டாக்டர் ஆர். வசந்தகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ். புவனேஸ்வரி, புதிய விளையாட்டு வளாகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த விளையாட்டு வளாகத்தில் கால்பந்து, பாக்ஸ் கிரிக்கெட் மற்றும் ஹேண்ட்பால் ஆகிய மூன்று விளையாட்டுகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை அதிகரித்தல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் எஸ். சுதாகர் செய்திருந்தார். மாணவர்கள் விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு நிலைகளில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

