News
கோவை துடியலூரில் 125 தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய சிரவை ஆதினம் சுவாமிகள்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி 14 மற்றும் 15 ஆம் வார்டுகளில் பணிபுரியும் 125 தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன.
கோவை துடியலூரில் தீபாவளி திருநாளுக்காக துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பாக கோவை மாநகராட்சி 14 மற்றும் 15 வது வார்டுகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 125 பேருக்கு சேலை, வேஷ், சட்டைகள் வழங்கப்பட்டன. இதனை கெளமார மடாலயம் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வழங்கினார்.
கோவை துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பாக கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் விதமாக புத்தாடைகளை வழங்கி வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை சார்பாக தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா துடியலூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கெளமார மடாலயம் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.
அவர் பேசும்போது கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பணிகள் தொடர வேண்டும் என்றும், யாரேனும் கல்வி உதவித் தொகை தேவைப்படுவோர் தொடர்பு கொண்டால் உதவி செய்யப்படும் என தெரிவித்தார்.
இதில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 14 மற்றும் 15 வார்டுகளில் பணிபுரியும் 125 தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. இறுதியில் அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் துடியலூர் மணியங்குலம் காளியம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள், குபேர ஆஞ்சநேயர் கோவில் நிர்வாக குழுவினர், கவுன்சிலர் சித்ரா தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

