News
கோவை பட்டணம் துணை மின் நிலையத்தில் நாளை (29.10.2026) மின்தடை
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை பட்டணம் துணை மின் நிலையத்தில் நாளை (29.10.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கோவை பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயண புரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம், கரவளி சாலை, நாகமநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சி புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.