News
அமராவதி, திருமூர்த்தி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்
SimpliCity News Team · 1 hour ago

Coimbatore: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் அக்டோபர் 24ஆம் தேதி இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 40.85 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1490 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் அக்டோபர் 24ஆம் தேதி இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 34.93 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 814 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 21 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.