News
ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்
SimpliCity News Team · 2 hours ago

Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்வதால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் அக்டோபர் 24 ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 57.7 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 295 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்தால் அக்டோபர் 24 ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 561 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 850 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் அக்டோபர் 24 ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 60.83 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 484 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 85 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.