News
கோவை வடவள்ளியில் மழைநீர் சேமிப்பு மற்றும் குப்பை தரம் பிரித்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39-க்குட்பட்ட வடவள்ளி, மகாராணி அவென்யூ குடியிருப்பு பகுதியில், மழைநீர் சேமிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நான்கு வகை குப்பை தரம் பிரிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (24.10.2026) நடைபெற்றது.
கோயம்பத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பதன் முக்கியத்துவம், குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குதல் மற்றும் டெங்கு கொசுப்புழு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள், ஸ்டிக்கர்ஸ் மற்றும் கோலம், ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம், மேற்கு மண்டலம் வார்டு எண்.39-க்குட்பட்ட வடவள்ளி, மகாராணி அவென்யூ குடியிருப்போர் நலசங்கம் சார்பில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு ஆகிய நான்கு வகைகளாக தரம் பிரிப்பதற்கான நான்கு நிறங்களில் குப்பைத்தொட்டிகளுடன் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
செயற்பொறியாளர் இந்நிகழ்வின் போது, உதவி ஆணையர் நர்மதா, உதவி சவிதா, மண்டல அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் விமலா, நாகராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், மகாராணி அவென்யூ குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
