News
கோவை அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.10.2026) மின்தடை
SimpliCity News Team · 6 hours ago

Coimbatore: அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (23.10.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
- பொத்தியாம்பாளையம்
- வாகராயம்பாளையம்
- ராசிபாளையம்
- செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி
- நீலாம்பூரின் ஒரு பகுதி
- ஊத்துப்பாளையம்
- குரும்பபாளையம்
மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த நேரத்தில் மின்சாரம் கிடைக்காது என்பதை கருத்தில் கொண்டு, தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.