News
கோவை ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை (23.10.2026) மின்தடை
SimpliCity News Team · 5 hours ago

Coimbatore: கோவை ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை (23.10.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கோவை ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின்தடை விதிக்கப்படுகிறது.
இதனால், ரேஸ் கோர்ஸ் தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) மற்றும் புளியகுளம் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.