News
திருட்டு வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவான கேரள இளைஞர் கோவை ரெயில் நிலையத்தில் கைது
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: திருட்டு வழக்கொன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கோவை ரெயில் நிலையம் முன்பாக பிடிவாரண்டின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் ஜிண்டோ (30). இவர் மீது ஏற்கனவே கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசனில் திருட்டு வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
ஆனால், ஜிண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதை அடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜிண்டோ கோவை ரெயில் நிலையம் முன்பாக நடமாடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டு இருந்த ஜிண்டோவை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.