News
தாராபுரம் தொகுதிக்கு புதிய திட்டங்களை அறிவித்த தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
காவிரியை ஆதாரமாகக் கொண்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,439 கோடியில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனுடன், தாராபுரம் தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு 2,700 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசன கால்வாய்களில் மண் திட்டுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் 159 இடங்களில் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும். தாராபுரத்தில் ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்.
மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் நகராட்சியில் ரூ.6 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், ரூ.40 லட்சத்தில் தெரு விளக்குகளும் அமைக்கப்படும்.
மேலும், தாராபுரம் தொகுதியில் 271 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால், கால்வாய் தூர்வாரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
