News
கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் அஇஅதிமுக 55வது நிறுவன தினம் சிறப்பு கொண்டாட்டம்
SimpliCity News Team · 12 hours ago

Coimbatore: கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) 1வது வட்டக் கழகம் சார்பாக கட்சியின் 55வது நிறுவன தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது திருஉருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அதன் நிறுவன தினத்தை அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை 1வது வட்டக் கழக அதிமுக சார்பாக கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் இந்நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருஉருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
1வது வட்டக் கழக செயலாளர் சாந்தி பூஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட ஐடி விங் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
இதில் துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன் தலைமையில் அவைத் தலைவர் செல்வகுமார் மற்றும் வர்த்தக அணி செயலாளர் முத்து, பழனிசாமி, மோகன்ராஜ், செல்வராஜ், நந்தகோபால், ராஜகோபால், ஜீவா, சண்முகசுந்தரம், கிட்டுசாமி, ராமசாமி, எம் ஆர் நாகராஜ், செட்டி அம்மாள் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருஉருவப்படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


