News
திருப்பூர்: அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம் வெளியீடு
SimpliCity News Team · 5 hours ago

Coimbatore: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால், டிசம்பர் 4ஆம் தேதி இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 36.03 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 219 கன அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் டிசம்பர் 4ஆம் தேதி இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 29.88 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 21 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.