News
கோவை புறநகர் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான துடியலூர், கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கன மழை பதிவானது.
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
அதன்படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 4 மணியளவில் கோவையின் புற நகர் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.
குறிப்பாக புறநகர் பகுதிகளான துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஜி என் மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.


