News
மேட்டுப்பாளையம் சாலையில் வலிப்பு ஏற்பட்டு அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு
SimpliCity News Team · 13 hours ago

Coimbatore: வலிப்பு ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது மோதி சவாரி செய்தவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜி.கவுண்டம்பாளையம் வெங்கடாசலபதி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (61). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மேட்டுப்பாளையம் சாலையில் ராக்கியாபாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற அரசு பேருந்தின் மீது மோதி கீழே சரிந்தது. இந்த விபத்தில் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் அடைந்த பழனிசாமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே மாலை அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் வினோத் (40) அளித்த புகாரின் பேரில் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.