News
சின்னியம்பாளையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து கார் சேதம்
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள எம்ஜி கார் ஷோரூம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டெமோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கோவையின் முக்கியப் பகுதியான சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியில் பிரபல எம்ஜி கார் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஷோரூம் முன்பு வாடிக்கையாளர்களின் பார்வைக்காகவும் சோதனை ஓட்டத்திற்காகவும் எம்ஜி ஆஸ்டர் (MG Astor) ரக கார் ஒன்று வழக்கமாக நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திடீரென அந்த டெமோ காரின் முற்பகுதியில் இருந்து புகை கிளம்பியதைத் தொடர்ந்து, எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்துக் எரியத் தொடங்கியது. ஷோரூம் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற போதிலும், தீ மளமளவென்று பரவியதால் அந்த காரின் முன் மற்றும் உட்பகுதிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
நடுரோட்டில் ஷோரூம் முன்பு நின்று கொண்டு இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் புகை மூட்டத்தால் அவதி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பீளமேடு தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து சென்று பார்த்த போது தீயை அங்கு இருந்த ஊழியர்களை அணைத்து விட்டனர்.
நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் என்ன, மின்கசடு காரணமாக விபத்து நேர்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷோரூம் முன்பு கார் தீப்பிடித்து எரிந்த இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
