News
திருப்பூரில் அரிவாள் வெட்டில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
SimpliCity News Team · 11 days ago

Coimbatore: திருப்பூரில் கல்லூரி மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஏபிடி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் ஸ்ரீஹரி, கொடுவாய் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த ஸ்ரீஹரியை, சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ஸ்ரீஹரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்தோடி வந்து அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீஹரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கே.வி.ஆர். நகர் போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.