News
வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி படுகாயமடைந்த நபர் கோவை மருத்துவமனைக்கு மாற்றம்
SimpliCity News Team · 16 days ago

Coimbatore: வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் கரடி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ், வயது 51. இவர் ரொட்டிக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுவிட்டு, தேயிலை தோட்டம் வழியாக பச்சமலை எஸ்டேட்டில் உள்ள தனது குடியிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
