News
கோவையில் கனமழை: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தடுப்பணை வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர பயணி மீட்பு
SimpliCity News Team · 05 Oct 2026

Coimbatore: கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிக்கிய நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் புதுப்பாளையம் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறியதால், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


