News
காந்தி ஜெயந்தி: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்
SimpliCity News Team · 1 day ago
கோவை: மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, காந்தியடிகள் மற்றும் காமராஜரின் திருவுருவச் சிலைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் காது கேட்கும் கருவிகளையும், தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, காலணி, கையுறை, முகக்கவசம், ரிப்ளக்டர் உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு, எஸ்.எஸ்.குளம், தெற்கு ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.