News
கோவை ஆர்.எஸ்.புரத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
SimpliCity News Team · 2 days ago
Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், குமாரசாமி ஏரி பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மாபெரும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 01.10.2026 அன்று மாலை ஆர்.எஸ்.புரம், குமாரசாமி ஏரி பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டெங்கு தடுப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் முதலில் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். மேலும், போட்டியில் கலந்துகொண்ட இரு அணிகளில் ஒர் அணியினர் ஏடிஸ் கொசுவாகவும் மற்றொரு அணியினர் பொது சுகாதார நடவடிக்கைகள் அடங்கிய அணியாகவும் களம் கண்டனர். இதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களான தேங்காய் சிரட்டை, டயர்கள், டப்பாக்கள் போன்றவைகள் அடங்கிய பதாதைகள் முன்பு டாஸ் போடப்பட்டது.
இப்போட்டி 7 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பொது சுகாதாரத்துறை அணியினர் தொடர்ந்து ரன்களை குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து ஏடிஸ் கொசு அணியினருக்கு 38 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஏடிஸ் கொசு அணியினர் 6.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 39 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றனர்.
இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ஏடிஸ் கொசு அணியைச் சேர்ந்த பொது சுகாதார பிரிவு மேலாளர் ப.சதீஸ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏடிஸ் கொசு அணியின் கேப்டன் சுகாதார ஆய்வாளர் அபினேஷ் வெற்றி கோப்பையை பெற்றார்.
மேலும், இப்போட்டியில் பார்வையாளர்களாக பங்கேற்ற பலரும் டெங்கு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த டெங்கு தடுப்பு விழிப்புணர்வு போட்டியானது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பொது இடங்களிலுள்ள மைதானங்களில் இதுபோல டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி வரும் நாட்களில் தொடர்ந்து நடத்தப்படும். இதன் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கொண்டுவரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைவதோடு டெங்கு இல்லா கோயம்புத்தூரை உருவாக்க முடியும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dengue AwarenessCoimbatore CorporationCricket MatchRS PuramKumarasamy LakePublic HealthAedes Mosquito
Related stories
News
Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam
03 Sept 2026
News
Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow
02 Jun 2026
News
பெரியார் நகர் பகுதியில் போடப்பட்ட சாலையை ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை
08 Feb 2024
News
Coimbatore Corporation Commissioner Inspects The New Amrut Drinking Water Project In Person!
08 Dec 2020