News
கோவை மேற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்
SimpliCity News Team · 3 days ago
Coimbatore: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர், இன்று (30.09.2026) வடக்கு மண்டலம், வார்டு எண்.3-க்கு உட்பட்ட துடியலூர், சரவணம்பட்டி சின்னவேடம்பட்டி, ராமன் விஹார் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் வழியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சொந்தமான சாலையின் இருபுறமும் வேகத்தடை தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், அப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். மேலும் மின் கம்பத்தினை மாற்றி அமைக்கவும், கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், மேற்கு மண்டலம், வார்டு எண்.45-க்கு உட்பட்ட கே.கே.புதூர், அழகு கண்ணன் வீதியில் மழைநீர் சேகரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், வார்டு எண்.44க்கு உட்பட்ட சிந்தாமணி நகரில் மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலம், வார்டு எண்.48க்குட்பட்ட காந்திபுரம், ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள மாடு அறுவைமனையை நேரில் பார்வையிட்டு, அப்பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மண்டலம், வார்டு எண்.23க்கு உட்பட்ட சித்ரா, விமான நிலைய சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (கிழக்கு), மோகனசுந்தரி (வடக்கு), நர்மதா (மேற்கு), கணேசன் (மத்தியம்), செயற்பொறியாளர்கள் தேவதாஸ், ஜெகன், உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன்(பொ), சரவணக்குமார்(பொ), எழில், சவிதா, சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர்கள் பேபி சுதா, காயத்திரி, பிரபா ரவீந்திரன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், இராதாகிருஷ்ணன், முருகன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், நித்யா, கணேசன், ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், தனபாலன், சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Coimbatore CorporationKatta Ravi TejaStorm Water DrainWest ZoneCivic InfrastructureSanitation WorksWard Inspection
Related stories
News
Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam
03 Sept 2026
News
Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow
02 Jun 2026
News
பெரியார் நகர் பகுதியில் போடப்பட்ட சாலையை ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை
08 Feb 2024
News
Coimbatore Corporation Commissioner Inspects The New Amrut Drinking Water Project In Person!
08 Dec 2020
News
பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு
21 Aug 2026
News
கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்
11 Aug 2026