Govt Notification
கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25.11.2026) மின்தடை
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை மாவட்டம் மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25.11.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மாலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் இதற்கேற்ப தங்களுடைய அன்றாட பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.