Govt Notification
கோவை கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2026) மின்தடை
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாவட்டம், கள்ளிமடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (20.11.2026) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக, காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம் மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் இல்லாததால், இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கோரப்பட்டுள்ளது.