Govt Notification
கோவை வடக்கு மண்டலத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு இன்று (17.11.2026) அறிவுறுத்தினார்.
வடக்கு மண்டலம், வார்டு எண்.11க்கு உட்பட்ட சக்தி சாலை, திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 236 மீட்டர் தொலைவிற்கும், ஜனதா நகர், மடாலயம் சாலை பகுதியில் சுமார் 790 மீட்டர் தொலைவிற்கும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவுற்ற இடங்களில் தார் சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள ஆணையாளர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.11-க்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், சின்னவேடம்பட்டி பிரதான சாலை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்தும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, மோகனசுந்தரி, உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ் (வருவாய்), செயற்பொறியாளர் தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி (பொ), மாமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி (எ) சிரவை சிவா, சித்ரா வெள்ளியங்கிரி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் சரண்யா, உத்தமன், குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

