Govt Notification
கோவையில் சாலை பணிகள், நீச்சல் குளம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்
SimpliCity News Team · 18 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நகரில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பொதுப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு எண் 38 க்கு உட்பட்ட மருதமலை பிரதான சாலையில், கான்கிரீட் கலவையின் தரம் குறித்தும், ஓனாபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்ற இடங்களில் வெட்மிக்ஸ் கலவை கொண்டு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர், வார்டு எண்.72க்கு உட்பட்ட காந்திபூங்கா வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தை நேரில் பார்வையிட்டு, பராமரிப்பு பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின் போது, மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் நர்மதா, செயற்பொறியாளர் ஜெகன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரிலோகசுந்தர், உதவி கோட்ட பொறியாளர்கள் ஹரி கிருஷ்ணன், திருராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் கீதா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, எழில், மாமன்ற உறுப்பினர் குமுதம், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதனுடன், உதவி பொறியாளர் விமலா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலரும் இந்த ஆய்வு நிகழ்வில் உடனிருந்தனர்.


