Govt Notification
கோவையில் சரவணம்பட்டி குட்டை தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர்
SimpliCity News Team · 4 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி குட்டை தூர்வாரும் பணிகளை மேயர் ரங்கநாயகி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். குட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாகப் பராமரித்து, மழைநீரைச் சேமிக்க ஏதுவாகப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இன்று (28.10.2026) நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மேயர் ரங்கநாயகி குட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளை நேரில் கண்காணித்து, தூர்வாரும் பணிகள் தரமாகவும் விரைவாகவும் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.1க்கு உட்பட்ட புதிதாக அமைத்துள்ள துடியலூர் பஸ் நிலையத்தையும், வார்டு எண்.4க்கு உட்பட்ட சரவணம்பட்டி குட்டையில் மழைநீரைச் சேமிக்க ஏதுவாக நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளையும், துடியலூர் கணுவாய் பிரதான சாலையில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மேயர் ரங்கநாயகி, வார்டு எண்.29-க்கு உட்பட்ட கணபதிபுதூர் டெக்ஸ்டூல் பாலம் அருகில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் உடைப்பினை சரிசெய்யும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செய்பொறியாளர் சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், சக்திவேல், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


