Govt Notification
கோவை வடக்கு மண்டலத்தில் தார் சாலை அமைப்பது, மழை நீர் வடிகால் தூர் வாருவது குறித்து மேயர் ஆய்வு
SimpliCity News Team · 5 days ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் இரயில்வே பாலம் கீழ் பகுதியில் தார் சாலை மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாக மேயர் க.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (27.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வார்டு எண் 28-க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலை, ஷோபா நகர் பட்டாளம்மன் கோவில் வீதியில் உள்ள இரயில்வே பாலம் கீழ் பகுதியை மேயர் நேரில் பார்வையிட்டார். இப்பணிகளுக்கான உரிய திட்டமதிப்பீடு தயார் செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, வார்டு எண் 27-க்கு உட்பட்ட பீளமேடு குறும்பர் வீதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றப்படுவதையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோபால் நகரில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை உடனடியாக தூர்வார சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணகி ஜோதிபாசு மற்றும் அம்பிகா தனபால், மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் சங்கீதா மற்றும் குமார், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

