Govt Notification
கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (27.10.2026) மின்தடை
SimpliCity News Team · 16 hours ago

Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (27.10.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெற உள்ளது.
இப்பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த மின்தடை விதிக்கப்படுகிறது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி. சாலை, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவார்பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புதிய வீதி, இடையர் வீதி மற்றும் ராஜ வீதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்நேரத்தில் தங்களது மின் தேவைகளை முன்கூட்டியே சரிசெய்து கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.