Govt Notification
கோவை துடியலூர் சேரன் காலனியில் மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
SimpliCity News Team · 1 hour ago

Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2-க்கு உட்பட்ட துடியலூர், சேரன் காலனி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநகராட்சி சார்பில் 24.10.2026 அன்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், டெங்கு நோய் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துடியலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.மனோஜ், சுகாதார ஆய்வாளர் க.ஜீவமுருகராஜ், தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
